மத்திய பட்ஜெட் 2024; முதலமைச்சர் ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு! - MK Stalin - MK STALIN
Published : Jul 23, 2024, 5:04 PM IST
|Updated : Jul 23, 2024, 5:56 PM IST
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு மூன்றாவது முறையாக பதவியேற்ற பிறகு நேற்று முதல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட் - 2024 தாக்கல் செய்தார். தொடர்ந்து 7வது முறையாக மத்திய நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. வருமான வரி விகிதம் மாற்றம், இறக்குமதி வரி குறைப்பு, ஆந்திரா மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு ஆகியவை முக்கிய அம்சங்களாக இடம் பெற்றன. ஆனால், தமிழ்நாடு தொடர்பாக எந்தவித அறிவிப்பும் வெளியாகாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம், விசாகப்பட்டினம் - சென்னை இடையே தொழில் வழித்தடம் அமைக்க வழிவகை செய்யப்படும் என ஆந்திர மாநில சிறப்பு நிதி அறிவிப்பில் இடம் பெற்றுள்ளது. இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய நிதிநிலை அறிக்கை தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்து வருகிறார். அதன் நேரலைக் காட்சிகள்..
Last Updated : Jul 23, 2024, 5:56 PM IST