தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

Live: வேலூர் மற்றும் அரக்கோணம் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்! - CM MK Stalin campaign in vellore - CM MK STALIN CAMPAIGN IN VELLORE

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 2, 2024, 6:52 PM IST

Updated : Apr 2, 2024, 8:43 PM IST

வேலூர்: 18வது நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் வரும் ஏப்.19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. அந்த வகையில், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பிரச்சார பொதுக்கூட்டங்களில் பங்கேற்றுப் பேசி வருகிறார். அந்த வகையில், நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்காக திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று(ஏப்.2) வேலூர், நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் கதிர் ஆனந்த் மற்றும் அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் ஜெகத்ரட்சகன் ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார். அதை நேரலையில் காணலாம்.இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில், வேலூர் தொகுதி வேட்பாளர் கதிர் ஆனந்த் மற்றும் அரக்கோணம் தொகுதி வேட்பாளர் ஜெகத்ரட்சகன் மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், வேலூர் மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.இதையும் படிங்க: திமுக Vs பாஜக என மாறுகிறதா தேர்தல் களம்? - உண்மை நிலவரம் என்ன? - DMK VS BJP
Last Updated : Apr 2, 2024, 8:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details