தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

LIVE: துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின்.. புதிய அமைச்சரவை பதவியேற்பு! - Udhayanidhi Stalin DCM - UDHAYANIDHI STALIN DCM

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 29, 2024, 3:22 PM IST

Updated : Sep 29, 2024, 3:55 PM IST

சென்னை: தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக ஆளுநர் மாளிகை நேற்று வெளியிட்டது. அதன்படி, தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று துணை முதலமைச்சராக பதவியேற்கிறார். இந்நிகழ்ச்சி தற்போது ராஜ்பவனில் நடைபெறுகிறது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டு ஒரு ஆண்டு 9 மாதங்களுக்குப் பிறகு அவருக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், சிறையில் இருந்து வெளியில் வந்த செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது. மேலும், முன்னதாக பால்வளத்துறை அமைச்சராக இருந்து நீக்கப்பட்ட எஸ்.எம்.நாசருக்கு தற்போது மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது. கொறடா கோ.வி.செழியன் மற்றும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.ராஜேந்திரன் புதிதாக அமைச்சரவையில் இடம் பெறுகின்றனர்.தொடர்ந்து, பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக மூத்த அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
Last Updated : Sep 29, 2024, 3:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details