தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

சட்டப்பேரவை தொடங்கியது: சபாநாயகரை முற்றுகையிட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள்! - illicit liquor in Kallakurichi - ILLICIT LIQUOR IN KALLAKURICHI

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 21, 2024, 10:10 AM IST

சென்னை: துறைகள் தோறும் நிதி ஒதுக்கத்துக்கான மானிய கோரிக்கை விவாதத்துக்காக, தமிழ்நாடு சட்டப்பேரவை நேற்று ஜூன் 20-ம் தேதி மீண்டும் கூடியது. முதல்நாளான நேற்று, மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்கள், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய உடன் கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கம் எழுப்பினர்.தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்றூ காலை நீர்வளத்துறை, இயற்கை வளங்கள் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில், சட்டமன்ற கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு, தங்களது கருத்துக்களை தெரிவித்தப் பின்னர் அமைச்சர்கள் துரைமுருகன், சி.வி.கணேசன் ஆகியோர் கேள்விகளுக்கு பதிலுரை நிகழ்த்த உள்ளனர். பின்னர், துறை ரீதியிலான பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளனர்.இக்கூட்டத் தொடரில் தமிழ்நாட்டையே சோகத்தில் ஆழ்த்திய கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் குறித்து அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர  உள்ளது. அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி பல்வேறு கேள்விகளை அரசுக்கு எதிராக எழுப்பி வரும் நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களைக் கண்டித்து, சட்டப்பேரவைக்கு அதிமுக உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details