திருவாரூர் டூ மயிலாடுதுறை புதிய பேருந்து சேவை; பேருந்தை ஓட்டிய எம்எல்ஏ பூண்டி கலைவாணன்! - Tiruvarur to Mayiladuthurai Bus
Published : Feb 9, 2024, 5:03 PM IST
திருவாரூர்: கொரடாச்சேரியில் இருந்து திருவாரூர் வழியாக மயிலாடுதுறைக்கு பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், அரசு ஊழியர்கள் பயன்படும் வகையில், புதிய அரசுப் பேருந்து சேவை இன்று (பிப்.09) துவக்கப்பட்டது. இதற்கான தொடக்க விழா இன்று காலை கொரடாச்சேரியில் நடைபெற்றது.
புதிய பேருந்து சேவையை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின், திருவாரூர் வரை 20 கிலோ மீட்டர் பேருந்தை பூண்டி கலைவாணன் இயக்கினார். இந்த நிகழ்வில் திமுக நிர்வாகிகள், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தஞ்சை - நாகை இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் கொரடாச்சேரி வரும் நிலையில், பெருமளவு பேருந்துகள் அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் நின்று செல்வதில்லை என புகார்கள் எழுந்து வந்தது. இந்நிலையில், மக்களின் கோரிக்கை அடிப்படையில் புதிய பேருந்து சேவை இயக்கப்பட்டுள்ளது குறித்து பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
முன்னதாக, நேற்று மணல்மேடு பேருந்து நிலையத்தில் இருந்து பட்டவர்த்தி மற்றும் மயிலாடுதுறை வழியாக திருவாரூர் மாவட்டத்திற்கு புதிய அரசுப் பேருந்து சேவைவை எம்எல்ஏ ராஜகுமார் துவக்கி வைத்தார்.