தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

பழனியில் ஆயிரம் நடனக் கலைஞர்கள் இணைந்து காவடி சிந்து நடனமாடி உலக சாதனை! - ஆயிரம் நடனக் கலைஞர்கள்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 11, 2024, 12:46 PM IST

Updated : Feb 15, 2024, 7:04 AM IST

திண்டுக்கல்: பழனி மலை அடிவாரத்தில் உலக சாதனை நிகழ்ச்சியாக, நடன நாட்டியம் நிகழ்ச்சி நடைபெற்றது. மலை அடிவாரத்தில் உள்ள கிரிவலப் பாதையில், ஐந்து வயது முதல் 50 வயது வரையிலான ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டியக் கலைஞர்கள் கலந்து கொண்டு நடனமாடினர். 

இந்த நடன நாட்டிய நிகழ்ச்சிக்காக சென்னை, பெங்களூரு, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து நடனக் கலைஞர்கள் பழனிக்கு வந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பரதநாட்டியம் ஆடுவதற்கு தகுந்தாற்போல் ஒரே மாதிரியான ஆடைகள் அணிந்து நடனம் ஆடினர். முருகனைப் போற்றி எழுதப்பட்ட பாடல்களான பழனி திருப்புகழ், காவடி சிந்து, சுப்ரபாதம் ஆகியவற்றிற்கு 20 நிமிடங்கள் தொடர்ச்சியாக நடனம் ஆடப்பட்டது. 

நடன நாட்டியத்தோடு, காவடி சிந்தையும் இணைத்து ஆயிரம் கலைஞர்கள் ஒரே நேரத்தில் நடனமாடியது இதுவே முதல்முறையாக அங்கீகரிக்கப்பட்டு, உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது. இந்த நிகழ்ச்சியை விர்ஷா உலக சாதனை அமைப்பு, அங்கீகாரம் செய்து சான்றிதழை வழங்கியது. விர்ஷா உலக சாதனை அமைப்பு, ஏற்கனவே ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தி, உலக சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Feb 15, 2024, 7:04 AM IST

ABOUT THE AUTHOR

...view details