திருவண்ணாமலையில் தை கிருத்திகை தேரோட்டம்.. திரளான பக்தர்கள் தரிசனம்! - Thai Krithikai festival
Published : Jan 20, 2024, 10:59 PM IST
திருவண்ணாமலை: ஸ்ரீ ஆறுமுகப் பெருமாள் ஆலயத்தில் 84வது ஆண்டு தை கிருத்திகை தேர் திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த எரும்பூண்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஆறுமுகப் பெருமாள் கோயிலில் 84வது ஆண்டு தை கிருத்திகை தேர்த் திருவிழா விமர்சையாக நடைபெற்றது.
இதில் ஆண்டுதோறும் தை கிருத்திகை முன்னிட்டு தேர்த் திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம் அதன்படி இந்த ஆண்டு தை கிருத்திகை முன்னிட்டு அதிகாலை பால்குடம் எடுத்து பாலபிஷேகம், பூ அலங்காரம், பக்தர்கள் விரதமிருந்து மஞ்சள் இடித்தல், மிளகாய் அபிஷேகம், மழுவடி, அலகு குத்துதல், காவடி எடுத்து முக்கிய மாட வீதி வழியாக நடனமாடியும், முதுகில் அலகு குத்தி முருகர் தேர் இழுத்தும் வீதியுலா வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கலந்து கொண்ட பக்தர்களுக்குக் கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.