தமிழ்நாடு சட்டப்பேரவை: 4-வது நாள் கூட்டத்தில் யுஜிசி-க்கு எதிராக முதல்வர் தனித்தீர்மானம்! - TAMIL NADU ASSEMBLY 2025
Published : Jan 9, 2025, 9:56 AM IST
|Updated : Jan 9, 2025, 12:17 PM IST
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6 திங்கட்கிழமை தொடங்கியது. ஆளுநர் உரை நிகழ்த்தாமல் வெளியேறியது, அதன் தமிழாக்கத்தை பேரவைத் தலைவர் அப்பாவு படித்தது என பரபரப்பாக தொடங்கிய பேரவையின் இரண்டாம் நாள் கூட்டம் இரங்கல் குறிப்புடன் ஒத்திவைக்கப்பட்டது. இதில், மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மறைந்த சட்டமன்ற உறுப்பினர் தமிழ்மொழி ராஜதத்தன், மறைந்த ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை பேரவைத் தலைவர் அப்பாவு வாசித்தார். மூன்றாம் நாளான நேற்று அண்ணாப் பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் குறித்து தனித்தீர்மானம் கொண்டுவரப்பட்டு விவாதிக்கப்பட்டது. அதில், சம்பந்தப்பட்டவர் மீது கடுமையான நடவடிக்கை, பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய நிவாரணம், யார் அந்த சார்? என்பதை கண்டுபிடிப்பது என பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, அ.தி.மு.க ஆதரவு தெரிவித்ததால் தான் டங்ஸ்டன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தியது என்று கூறினார். இன்றைய நிகழ்வில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமிப்பது உள்பட பல விதிமுறைகளைத் திருத்தி புதிய வரைவை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தனித்தீர்மானம் கொண்டுவருகிறார்.
Last Updated : Jan 9, 2025, 12:17 PM IST