தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

LIVE: உலகக் கோப்பையுடன் இந்திய வீரர்கள் ரோடு ஷோ.. கொட்டும் மழையில் ரசிகர்கள் கொண்டாட்டம்! - Indian team Road Show - INDIAN TEAM ROAD SHOW

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 4, 2024, 5:16 PM IST

மும்பை: 20 ஓவர் உலக கோப்பை வென்ற இந்திய அணியை பாராட்டும் வகையில் மும்பை வான்கடே மைதானத்தில் பிரம்மாண்ட வெற்றி விழா நடைபெறுகிறது. பார்படோசில் இருந்து ஏர் இந்தியா சிறப்பு விமானம் மூலம் இன்று (ஜூலை.4) காலை 6 மணி அளவில் தலைநகர் டெல்லி வந்த இந்திய அணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து காலை 11 மணிக்கு இந்திய அணி வீரர்கள் பிரதமர் மோடியை சந்தித்தனர். 7 லோக் கல்யாண் மார்க் பகுதியில் உள்ள பிரதமர் இல்லத்தில் வைத்து இந்திய வீரர்கள் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். உலக கோப்பை அனுபவம் குறித்து இந்திய வீரர்களுடன் உரையாடிய பிரதமர் மோடி, தொடர்ந்து வீரர்களுக்கு விருந்தளித்தார். அங்கிருந்து மீண்டும் நட்சத்திர விடுதிக்கு புறப்பட்ட இந்திய வீரர்கள் சிறிது நேரம் ஓய்வு எடுத்தனர். தொடர்ந்து இந்திய வீரர்கள் மும்பை புறப்பட்டனர். தொடர்ந்து மாலை 5 மணிக்கு மும்பை செல்லும் வீரர்கள், நாரிமன் பாய்ன்ட் பகுதியில் இருந்து வான்கடே மைதானத்திற்கு திறந்தவெளி வாகனத்தில் ஊர்வலமாக செல்கின்றனர். செல்லும் வழியில் இந்திய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ரசிகர்கள் சாலைகளின் இரு மருங்கிலும் காத்திருக்கின்றனர். தொடர்ந்து இரவு 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய அணி வீரர்களுக்கு பாராட்டு விழா கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன. உலக கோப்பை வென்ற இந்திய அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் குழுவுக்கு 125 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. முன்னதாக மும்பை வானக்டே மைதானத்தில் நடைபெறும் வெற்றி விழாவில் பொது மக்கள் அனைவரும் இலவசமாக கலந்து கொள்ளலாம் என மகாராஷ்டிரா கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 

ABOUT THE AUTHOR

...view details