தரங்கம்பாடி சீதளாதேவி மாரியம்மன் கோயிலில் வெளிநாட்டவர் சாமி தரிசனம்! - SEETHALADEVI MARIAMMAN TEMPLE
Published : Nov 23, 2024, 7:34 PM IST
மயிலாடுதுறை : இந்து மதம், தமிழர்களின் கலாச்சாரம், தமிழகத்தில் உள்ள கோயில்களை பற்றி அறிந்து கொள்வதற்காக ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் தமிழகத்திற்கு வருகை தருவர். அந்த வகையில், ரஷ்யா, கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்த அலெக்ஸி என்கிற மித்ரா, நந்த தேவ், அண்ணா, தேஜா நந்தா, அருணிமா தேவி, உள்ளிட்ட ஆறு பேர் தமிழகத்திற்கு ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இந்த ஆறு பேரும், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் உள்ள நவக்கிரக கோயில்களுக்கு சென்று விட்டு இன்று( நவ 23) தரங்கம்பாடி தாலுகா, நல்லாடை ஊராட்சி, பணங்குடி கிராமத்தில் உள்ள சீதளாதேவி மாரியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து கோயில் குருக்கள் 6 பேருக்கும் பரிவட்டம் கட்டி, மாலை அணிவித்தார். தொடர்ந்து அம்மனுக்கு நடைபெற்ற அபிஷேகங்களைக் கண்டு தரிசனம் செய்தனர்.
பின்னர், தாங்கள் கொண்டு வந்த ஆறடி உயரமுள்ள வேலுக்கு சிறப்பு பூஜையும் செய்தனர். பூஜை செய்யப்பட்ட வேலுடன் பழனிக்கு சென்று முருகனை வழிபட உள்ளதாக தெரிவித்தனர். இவர்கள் சித்தூர் நாடி ஜோதிடர் கோபிநாத் தலைமையில் ஆலய தரிசனங்கள் மேற்கொண்டு வருகின்றனர்.