அதிவேகமாக வந்த ஆட்டோ.. வீட்டு வாசலில் நின்றிருந்தவர்கள் மீது மோதி விபத்து! - auto accident in vellore - AUTO ACCIDENT IN VELLORE
Published : May 29, 2024, 6:20 PM IST
வேலூர்: கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சந்தைப்பேட்டை பஜார் பகுதியில் உள்ள வீட்டின் அருகே சதீஷ் என்பவரும், ராஜேஷ் என்பவரும் பேசிக் கொண்டிருந்துள்ளனர்.
அப்போது சாலையில் ஆட்டோ வேகமாக வந்து கொண்டிருந்துள்ளது. இதனிடையே, சாலையின் குருக்கே நாய் ஒன்று வந்துள்ளது. இதனால், நாய் மீது மோதாமல் இருக்க ஆட்டோவை ஓட்டுநர் திருப்ப முயன்றுள்ளார். இதில் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ, வீட்டின் முன்பு பேசிக் கொண்டிருந்த இருவர் மீதும் மோதி உள்ளது. இருப்பினும், முன்னதாகவே ஆட்டோ வேகமாக வருவதை சுதாரித்த இருவரும் விலகிச் சென்றதால் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
மேலும், கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோவின் ஓட்டுநர் கிழே விழுந்து, அவர் மீது ஆட்டோ விழுந்தது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் அவரை மீட்டனர். நல்வாய்ப்பாக விபத்தில் சிக்கிய நபர்கள் அனைவரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இந்நிலையில், வேகமாக வந்த ஆட்டோ மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.