51 ஆண்டுகளுக்கு முன் பயின்ற மாணவர்களின் நெகிழ்ச்சியான சந்திப்பு நிகழ்ச்சி! - Reunion program - REUNION PROGRAM
Published : May 27, 2024, 7:24 PM IST
திண்டுக்கல்: பழனி சிறுமலர் நடுநிலைப் பள்ளியில் முன்னாள் பள்ளி மாணவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி கான்வென்ட் சாலையில் உள்ளது சிறுமலர் நடுநிலைப் பள்ளி. இங்கு 1973ஆம் ஆண்டு முதல் 1982ஆம் ஆண்டு வரை ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி (Reunion program) நடைபெற்றது.
இதில் மருத்துவர்கள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட உயர் பதவிகளில் உள்ளவர்கள், வெளிநாடுகளில் தற்போது பணியில் உள்ளவர்கள் என அனைவரும் தனது பிள்ளைகள், பேரன், பேத்திகள் என குடும்பத்துடன் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஒருவருக்கொருவர், தாங்கள் பயின்ற காலங்களில் நடந்த நிகழ்வுகளை மலரும் நினைவுகளாக பரிமாறிக் கொண்டு தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அதேபோல் தங்களுக்குப் பயிற்றுவித்த ஆசிரியர்களை நிகழ்ச்சிக்கு அழைத்து வந்து அவர்களை கௌரவித்து வாழ்த்து பெற்றனர். மேலும், தாங்கள் பள்ளியில் பயின்ற காலத்தில் ஐஸ் விற்பனை செய்த வியாபாரியை அழைத்து அவரிடம் ஐஸ் வாங்கி உண்டு மகிழ்ந்தனர்.