தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

சிஎஸ்கே உடனான போட்டியில் என்னுடைய சவால் இதுதான்.. அஸ்வின் கூறியது என்ன? - Ravichandran Ashwin - RAVICHANDRAN ASHWIN

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 9, 2024, 5:27 PM IST

சென்னை: தற்போது இந்தியா முழுவதும் ஐபிஎல் தொடர் கோலகலமாக நடந்து வருகிறது. இந்நிலையில், மே 12 அன்று நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்கிறது.

இப்போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறுவதற்கு முக்கியமான போட்டியாக கருதப்படுகிறது. இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் பங்கேற்பதற்காக சென்னை விமான நிலையம் வந்த தமிழ்நாட்டைச் சார்ந்த இந்திய சுழற்பந்து கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் அளித்த பேட்டியின்போது, பிறந்த மண்ணில் விளையாடுவது எப்படிப்பட்ட அனுபவத்தை தருகிறது என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், சென்னையில் விளையாடுவது மிக மகிழ்ச்சியான விஷயம் எனவும், சென்னையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து விளையாடுவது மிகப்பெரிய விஷயம் மற்றும் நான் இங்கே விளையாடி வளர்ந்ததனால் எனக்கு எப்போதுமே சேப்பாக்கம் மிகவும் பிடிக்கும் எனவும் தெரிவித்தார். பேட்டிக்குப் பின் தனது குடும்பத்துடன் அவர் காரில் சென்றார்.

ABOUT THE AUTHOR

...view details