வருடத்திற்கு ஒருமுறை சூடம்மாள் அம்மனை வழிபடும் சூரிய பகவான்.. தேனியில் பக்தர்கள் தரிசனம்! - sunlight falling on idol at theni - SUNLIGHT FALLING ON IDOL AT THENI
Published : Apr 27, 2024, 5:30 PM IST
தேனி: சூரிய ஒளி அம்மன் மீது படும் அரிய நிகழ்வு, இன்று (ஏப்.27) தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள சூடம்மாள் அம்மன் கோயிலில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே உள்ள மூர்த்திநாயக்கன்பட்டியில் ஸ்ரீ சூடம்மாள் அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயிலில் வருடத்திற்கு ஒருமுறை சித்ரா பௌர்ணமி வார நாட்களில், சூரிய ஒளி அம்மன் மீது படும் நிகழ்வு நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், இந்த வருட சித்ரா பௌர்ணமி விழா வார நாட்களான இன்று, சூரிய ஒளி அம்மன் மீது படும் அரிய நிகழ்வு நடைபெற்றது.
அம்மனின் தலை உச்சியில் படும் சூரிய ஒளிக்கதிர் மெல்ல மெல்ல நகர்ந்து கால் பாதம் வரை இடம்பெறும். இந்த அரிய நிகழ்வை பக்தர்கள் பார்த்து அம்மனை தரிசனம் செய்தனர். மேலும், அம்மன் சிலை மீது சூரிய ஒளி படும் நேரங்களில், வேண்டுதல்களை அம்மன் நிறைவேற்றித் தருவதாக கோயிலுக்கு வந்த பக்தர்கள் தெரிவித்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.