தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

LIVE: நெல்லையில் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார் - பிரதமர் மோடி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 28, 2024, 12:05 PM IST

Updated : Feb 28, 2024, 1:12 PM IST

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று (பிப்.28) நடக்கும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி அங்கு சிறப்புரையாற்றி வருகிறார். அதை நேரலையில் காணலாம்..திருநெல்வேலியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் காலை 11:15 மணி முதல் 12.15 மணிவரை பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளார். இது திருநெல்வேலிக்கு பிரதமர் மோடி வருவது முதல்முறையாகும். இந்நிகழ்ச்சிகளுக்குப் பின்னர், பிரதமர் மோடி மீண்டும் தனி ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் செல்ல உள்ளார்.இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு பிரதமர் நரேந்திர மோடி வந்துள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' பயணத்தின் நிறைவு விழாவில் பங்கேற்ற அவர், அங்கு 2024 நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியால் மக்களுக்கு பயன் கிடைக்காது என்றும் தமிழ்நாட்டில் அரசியல் திருப்புமுனை ஏற்படும் என்றும் பேசினார். பின்னர் ஹெலிகாப்டரில் மதுரை சென்றார்.பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் தூத்துக்குடி மாவட்டம் வந்த பிரதமர் மோடி, குலசேகரன்பட்டினத்தில் அமைந்துள்ள இஸ்ரோ நிறுவனத்தின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளத்திற்கு இன்று அடிக்கல் நாட்டினார். தூத்துக்குடி வஉசி துறைமுகத்திற்கு வரும் பிரதமர் மோடி அங்கு, வெளி துறைமுகம், கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம், பசுமை ஹைட்ரஜன் நிரப்பும் மையம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினார். இதனிடையே, குலசேகரன்பட்டினத்தில் இருந்து ரோகிணி (Rohini sounding rocket) விண்ணில் ஏவப்பட உள்ளது. இதனால் மணப்பாடு முதல் பெரியதாழை வரையிலான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி எச்சரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Last Updated : Feb 28, 2024, 1:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details