தொடர் விடுமுறை.. அண்ணாமலையார் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்..! - annamalaiyar darshan
Published : Jan 21, 2024, 10:20 PM IST
திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோயிலில் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் திருக்கோயிலில் ஞாயிறு தினமான இன்று தெலுங்கானா, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் மற்றும் பராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. அதிகாலை முதல் அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட வரிசையில் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.
இதனால் பக்தர்கள் சுமார் ஆமா மூன்று மணி நேரத்துக்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தொடர் விடுமுறையையொட்டி ஆயிரக்கண பக்தர்கள் தங்களது வாகனங்களில் குவிந்ததால் நகரில் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.