தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

தருமபுரியில் மொபட் மீது பைக் மோதி விபத்து.. ஒருவர் உயிரிழப்பு! - bike accident in dharmapuri - BIKE ACCIDENT IN DHARMAPURI

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 10, 2024, 7:57 PM IST

தருமபுரி: தருமபுரி மாவட்டம், பாலக்கோடு மைதீன்நகரைச் சேர்ந்தவர் அயுப் (55). இவர் பாலக்கோடு பைபாஸ் சாலையில், பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். இன்று காலை 10 மணியளவில், அயுப் டீ குடிப்பதற்காகக் கடையிலிருந்து தனது மொபட் மூலம் சாலையைக் கடக்க முயன்றார்.

அப்போது பாலக்கோடு அருகே கொட்டாப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் மணிகண்டன் என்பவர் ஓட்டி வந்த பைக் அயுப் ஓட்டி வந்த மொபட் மீது மோதியது. இதில், இருவரும் பலத்த காயமடைந்தனர். 

இதனைப்பார்த்த அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் இருவரையும் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் பாலக்கோடு அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு, மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் அயுப் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். 

மேலும், பலத்த காயமடைந்த சிறுவனை பாலக்கோடு மருத்துவமனையிலிருந்து மேல் சிகிச்சைக்காகத் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலறிந்த பாலக்கோடு போலீசார், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகின்றது.

ABOUT THE AUTHOR

...view details