மயான வேலையை மனநிறைவேடு செய்யும் சாதனைப்பெண்! மகளிர் தினத்தில் கொரவித்த தனியார் சட்டக்கல்லூரி - மகளிர் தின கொண்டாட்டம்
Published : Mar 9, 2024, 7:48 AM IST
ஈரோடு: பெண்களின் சாதனை, கலாச்சாரம், பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து சாதனைகளையும் கொண்டாடும் விதமாக உலகம் முழுவதும் நேற்று (மார்ச் 8) சர்வதேச மகளிர் தினம் (International Women's Day) கொண்டாடப்பட்டது.
அந்த வகையில் ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே அமைந்துள்ள தனியார் சட்டக்கல்லூரியில் மகளிர் தினவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. அப்போது, கல்லூரியில் பயிலும் மாணவிகள், பெண்களின் முன்னேற்றத்தையும், ஊக்கத்தையும் வெளிப்படுத்தும் விதமாக உரையாற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து, நிகழ்ச்சியில் பெண்கள் பல்வேறு பாடல்களுக்கு நடனமாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில், பெண்களின் கடின உழைப்புகளை கொளரவிக்கும் விதமாக, செயல்பட்டு வரும் ஈரோட்டில் இறந்தவர்களில் உடல்களைத் தகனம் செய்யும் பணியில் ஈடுபட்டு வரும் சாதனைப்பெண் 'தேன்மொழி' என்பவர் இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். நிகழ்ச்சி மேடையில் அவருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சாதனைப்பெண் தேன்மொழி, 'பெண்கள் பல்வேறு பணிகளில் சிறப்பாக பணியாற்றி வரும் நிலையில், தான் உடல்களைத் தகனம் பணியைத் தேர்வு செய்து, ஆர்வத்துடன் பணியாற்றி வருவதாகவும், கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் 20 ஆயிரம் உடல்கள் தகனம் செய்துள்ளதாகவும்' தெரிவித்தார்.