தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

பைக் மீது மோதிய தனியார் பேருந்து.. தூக்கி வீசப்பட்ட முதியவர்.. பதைப்பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி! - Tirupathur bus accident - TIRUPATHUR BUS ACCIDENT

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 25, 2024, 11:54 AM IST

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அடுத்த ஓமகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பாப்பண்ணன் மகன் புட்டன்(70). இவர் நேற்று தன்னுடைய வீட்டில் இருந்து மிட்டூர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில், பைக்கிற்கு பெட்ரோல் போட வந்துள்ளார். அப்போது சாலையில் எதிர்த்திசையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு செல்ல திடீரென சாலையைக் கடந்துள்ளார். 

அப்போது, ஆலங்காயம் பகுதியைச் சேர்ந்த காதர் பாஷாவின் மகன் சாருக் தனியாருக்குச் சொந்தமான பேருந்து ஒன்றை ஓட்டி வந்துள்ளார். மேலும், மிட்டூர் பகுதியில் பேருந்து அதிவேகமாக வந்து கொண்டிருந்தபோது, திடீரென சாலையைக் கடந்த புட்டன் மீது மோதியுள்ளது. பேருந்து பைக் மீது வேகமாக  மோதியதில் தூக்கி வீசப்பட்ட புட்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த குரிசிலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

பெட்ரோல் போட சாலையைக் கடந்த முதியவர் மீது பேருந்து மோதி அவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்து தொடர்பாக பெட்ரோல் பங்கில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ள வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ABOUT THE AUTHOR

...view details