Live: முத்தமிழ் முருகன் மாநாட்டை துவக்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.. அதன் நேரலை காட்சிகள்! - Muthamizh Murugan Maanadu - MUTHAMIZH MURUGAN MAANADU
Published : Aug 24, 2024, 8:30 AM IST
திண்டுக்கல்: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பழனியில் இன்றும், நாளையும் நடைபெறவுள்ள 'முத்தமிழ் முருகன் மாநாட்டை' சென்னையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 9:45 மணியளவில் துவக்கி வைத்தார். அதன் நேரலை காட்சிகளை தற்போது பார்த்து வருகிறோம்.இந்த மாநாட்டிற்காக வெளிநாட்டைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் முருகன் தொடர்பான கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளனர். மேலும் முருகனின் புகழ் பரப்பிக் கொண்டும், சேவையாற்றிக் கொண்டிருக்கும் 16 பேருக்கு ஒரு பவுன் தங்க நாணயம் மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட உள்ளனர். இந்த மாநாட்டில் நாடகம், பாட்டு, பரதநாட்டியம், சொற்பொழிவு மற்றும் கிராமிய பாடல்கள் என பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ள தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஒரு லட்சம் பக்தர்கள் வருகை தரக்கூடும் என்பதால், 2 நாள் முழுவதும் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், பக்தர்கள் சிரமமின்றி வந்து செல்ல ஏதுவாக சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாடு பந்தலில் அமைக்கப்பட்டுள்ள கலையரங்கத்தில், 3டி திரை அமைக்கப்பட்டுள்ளது. இதில் முருகனின் 6 நிமிடம் பாடல் காட்சிகள், அரங்கத்தில் உள்ள அறுபடை முருகனின் சிலைகள் குறித்த பதிவுகள், மாநாடு முடிந்து ஒரு வாரம் வரை பொதுமக்கள் கண்டுகளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் தடுக்க 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.