வாணியம்பாடியில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி.. 6 முதல் 60 வரை அசாத்திய திறமைகளின் வீடியோ! - Silambam Competition in Vaniyambadi - SILAMBAM COMPETITION IN VANIYAMBADI
Published : Jul 2, 2024, 10:11 AM IST
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் சிலம்பாட்ட பயிற்சியாளர் ரவி. இவரின் 50 ஆண்டுகால சிலம்பாட்ட பயிற்சியை முன்னிட்டு, வாணியம்பாடியில் உள்ள கன்கார்டியா மேல்நிலைப் பள்ளியில், மாநில அளவிலான சிலம்பம் மற்றும் யோகா போட்டிகள் நடைபெற்றது.
இந்த போட்டியில், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், சென்னை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்தும் சுமார் ஆயிரம் மாணவ மாணவிகள், சிலம்பாட்ட வீரர்கள் மற்றும் சிலம்பம் பயிற்சியாளர்கள் என சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
மேலும், வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் இந்த போட்டியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, சிலம்பாட்டம் மற்றும் யோகா போட்டியினை துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து சிலம்பம் மற்றும் யோகா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டது. இப்போட்டியினைக் காண பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமானோர் வந்திருந்தனர்.