தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 4, 2024, 6:59 PM IST

Updated : Jun 4, 2024, 7:05 PM IST

ETV Bharat / videos

40க்கு 40 வெற்றி: மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு! - Lok Sabha Election results 2024

சென்னை: நாட்டின் 18வது மக்களவைத் தேர்தல் 2024 நடைபெற்று முடிந்து இன்று வாக்கு எண்ணும் பணி முடிவடையும் நிலையில் உள்ளது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சிகள் முன்னிலையில் உள்ளன. இந்த நிலையில், திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்து வருகிறார். அதன் நேரலைக் காட்சிகள்..முன்னதாக, தூத்துக்குடி, நாகப்பட்டினம், திருநெல்வேலி, கடலூர் உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட திமுக தலைமையிலான கட்சி வேட்பாளர்களின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், நீண்ட இழுபறியில் இருந்த தருமபுரி தொகுதியில் இறுதியாக திமுக வேட்பாளர் ஆ.மணியின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், விருதுநகர் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேமுதிக வேட்பாளரும், மறைந்த கேப்டன் விஜயகாந்தின் மகனுமான விஜய பிரபாகரன் முன்னிலையில் இருந்து வந்தார். பின்னர், காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் முன்னிலை வகித்து வருகிறார். மேலும், விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். 
Last Updated : Jun 4, 2024, 7:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details