LIVE: கலையுலக வித்தகர் ராமோஜி ராவின் இறுதி ஊர்வலம்! - Media Tycoon Ramoji Rao Funeral - MEDIA TYCOON RAMOJI RAO FUNERAL
Published : Jun 9, 2024, 9:07 AM IST
|Updated : Jun 9, 2024, 11:36 AM IST
ஐதராபாத்: மூத்த பத்திரிகையாளரும், ராமோஜி குழுமத்தின் நிறுவனருமான ராமோஜி ராவ் நேற்று (ஜூன்.8) அதிகாலை உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 87. இந்தியாவின் மிகப்பெரிய சினிமா தளமான ராமோஜி பிலிம் சிட்டி உருவாக்கிய பெருமைக்குரியவர் ராமோஜி ராவ். அது மட்டுமல்லாது, ஈநாடு பத்திரிகை, ஈடிவி டெலிவிஷன் மற்றும் ஈடிவி பாரத் நெட்வொர்க் போன்ற நிறுவனங்களை தொடங்கி ஊடக உலகிற்கு பல்வேறு தொண்டுகளை செய்துள்ளார். ராமோஜி ராவ் மறைவுக்கு, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் ராமோஜி ராவின் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஆந்திர பிரதேச முதலமைச்சராக பதவியேற்க உள்ள சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து இன்று (ஜூன்.9) காலை இறுதி அஞ்சலி நடைபெறுகிறது. தொடர்ந்து ராமோஜி ராவின் உடலுக்கு அரசு மாரியாதை வழங்கப்படுகிறது. காலை 9 மணி முதல் 11 மணிக்குள் ராமோஜி ராவின் இறுதிச்சடங்கு நடைபெறுகின்றன.
Last Updated : Jun 9, 2024, 11:36 AM IST