தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

புதிய பேருந்துகள் வாங்குவதில் தாமதம் ஏன்? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்! - New Government Bus Opening

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 20, 2024, 9:55 PM IST

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் புதிய பேருந்துகள் தொடக்க விழா, ஆட்சியர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. இதில் 23 புதிய பேருந்துகளை அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்.

அப்போது பேசிய அமைச்சர் சிவசங்கர், “தமிழ்நாட்டில் அதிக அளவு பழைய பேருந்துகள் இயங்குவதற்கு காரணம் அதிமுக ஆட்சிதான். அவர்கள் வாங்கிய புதிய பேருந்துகளின் எண்ணிக்கை 14,000, அதுவும் மாற்றம் கூட செய்யாதவை. ஆனால், கருணாநிதி காலத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு 15,000 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன. அதேபோல், முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற போது கரோனா கால நெருக்கடி. அதனால் பேருந்துகளை தயாரிக்கும் நிறுவனங்கள் மூடப்பட்டன. 

மேலும், மாற்றுத்திறனாளிகள் அமரும் வகையில் பேருந்துகள் தயாரிப்பது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்த காரணமாக பேருந்துகள் வாங்குவதற்கு தாமதம் ஏற்பட்டது. தமிழ்நாட்டில் தான் 40 கோடி நிதி ஒதுக்கப்பட்டு போக்குவரத்து ஓட்டுநர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டுமே தான் போக்குவரத்துக் கழகங்கள் சிறப்பாக செயல்படுகிறது” எனக் கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details