தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

102 வயது முதியவருக்குப் பேரன், கொள்ளுப்பேரன் நடத்திய கனகாபிஷேகம் நிகழ்ச்சி.. திருவிழாக்கோலமாக மாறிய ஆவலப்பள்ளி! - Kanakabhishekam festival - KANAKABHISHEKAM FESTIVAL

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 1, 2024, 10:38 PM IST

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த ஆவலப்பள்ளி பகுதியைச் சேர்ந்த ஓசூர் திமுக ஒன்றிய செயலாளர் கஜேந்திரமூர்த்தி என்பவரது தந்தை ரங்கப்பா(102).  இவரது மனைவி எர்ரம்மா (92). இவர்களுக்கு 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். 

இந்த தம்பதி தற்போது பேரன், பேத்தி, கொள்ளுபேரன்கள் என 4 தலைமுறைகளைச் சேர்ந்த 35 பேரைக் கண்டுள்ளனர். இந்த நிலையில், இன்று (ஏப்ரல் 01) ஆவலப்பள்ளி கிராமத்தில் நூறு வயதைக் கடந்த முதியவர் ரங்கப்பாவிற்கு மகன்கள், பேரன், பேத்திகள் கொண்டாடிய கனகாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது. 

வயதான இந்த தம்பதிக்கு உறவினர்கள் கலசத்தில் கொண்டு வந்த நீரை, தங்க நாணயம் கொண்ட சல்லடையில் ஊற்றி வேத மந்திரங்கள் ஓத நிகழ்ச்சி நடத்தினர். மேலும் உற்றார், உறவினர்கள் ஊர் பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மூத்த தம்பதியான ரங்கப்பா - எர்ரம்மா கால்களில் விழுந்து ஆசி பெற்றுச் சென்றனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு விதவிதமான அறுசுவை உணவு அன்புடன் பரிமாறப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

ABOUT THE AUTHOR

...view details