கர்நாடகாவில் கனமழை எதிரொலியால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு! - hogenakkal water inflow rises - HOGENAKKAL WATER INFLOW RISES
Published : Jul 3, 2024, 9:52 AM IST
தருமபுரி: கர்நாடக மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணா ராஜ சாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. இதன் காரணமாக கடந்த சில தினங்களாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 1,500 கன அடியாக அதிகரித்தது.
இன்று (புதன்கிழமை) காலை நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 2,000 கன அடி நீர் அதிகரித்து 3 ஆயிரத்து 500 கன அடியாக அதிகரித்து உள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் மெயின் அருவி சினிஅருவி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது.
இதனால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படுகிறது. அதேபோல் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். காரணம் அடுத்த வரும் நாட்களில் இதே நிலை நீடித்தால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர ஆரம்பிக்கும். இதனால் காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.