திண்டுக்கல்லில் நடனமாடிக் கொண்டே வேட்பு மனு தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர்! - dindigul candidate dance - DINDIGUL CANDIDATE DANCE
Published : Mar 27, 2024, 7:59 PM IST
திண்டுக்கல்: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதன்படி, தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள், மாவட்ட ஆட்சியரிடம் மனுவை வழங்கி வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாளான இன்று, அனைத்து மாவட்டங்களிலும் பரபரப்பான சூழல் நிலவியது.
இந்த நிலையில், திண்டுக்கல் கிழக்கு ஆரோக்கிய மாதா தெருவைச் சேர்ந்த அன்பு ரோஸ் என்ற சுயேட்சை வேட்பாளர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 'எல்லோருமே திருடங்க தான்' என்ற சினிமாப் பாடலை ஒலிக்கச் செய்த படி, நடனமாடிக் கொண்டே வந்து, திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பூங்கொடியிடம் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். மேலும், வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று சினிமா பாடலை ஒலிக்கச் செய்தபடி நடனமாடிக் கொண்டே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் வந்த சுயேட்சை வேட்பாளர் அன்பு ரோஸ் என்பவரது நடனம் அங்கிருந்த அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.