கோலாகலமாக நடைபெற்ற கீழ மைக்கேல்பட்டி புனித வனத்து சின்னப்பர் தேர் பவனி! - Holy forest chinnappar temple - HOLY FOREST CHINNAPPAR TEMPLE
Published : May 16, 2024, 10:19 PM IST
அரியலூர்: அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே பிரசித்தி பெற்ற புனித வனத்து சின்னப்பர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் ஆண்டு திருவிழா, கடந்த மே 13ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, நவநாள் திருப்பலி, நற்கருணை ஆசீர் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதையடுத்து, விழாவின் முக்கிய நிகழ்வான தேர் பவனியை குடந்தை முன்னாள் ஆயர் அந்தோணிசாமி, குடந்தை மறை மாவட்ட ஆயர் ஜீவானந்தம் அமலநாதன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர். வண்ண விளக்குகளால் தயார் செய்யப்பட்ட சப்பரத்தில், புனித வனத்து சின்னப்பர், ஆரோக்கிய அன்னை மற்றும் சம்மனசு ஆகியோர் எழுந்தருளினர்.
பின்னர், வானவேடிக்கை மற்றும் பேண்டு வாத்தியம் முழங்க திருத்தேர், ஆலயத்தில் இருந்து புறப்பட்டு, தா.பழூர் செல்லும் சாலை வழியாக கீழ மைக்கேல்பட்டி புனித மைக்கேல் அதிதூதர் ஆலய வாயிலைச் சென்றடைந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை கீழமைக்கேல்பட்டி பங்குத்தந்தை அடைக்கலசாமி மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
இவ்விழாவில், அரியலூர் மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, புனித வனத்து சின்னப்பருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்தனர்.