திருப்பத்தூர் மாவட்டத்தை குளிரவைத்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி - TN Rainfall update - TN RAINFALL UPDATE
Published : May 8, 2024, 12:12 PM IST
திருப்பத்தூர்: தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. பல பகுதிகளில் வெப்ப அலை வீசியதால் மக்கள் சிரமத்திற்குள்ளாகினர். இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயில் 100 டிகிரிக்கும் மேல் வாட்டி வதைத்து, அனல் காற்று வீசியது.
இந்நிலையில், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் தவித்து வந்த நிலையில், ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி சுற்று வட்டார கிராம பகுதிகளில் கடந்த சில தினங்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வந்தது.
இந்நிலையில், இன்று ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் அதிகாலை முதலே கனமழை பெய்து வருவதால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதேபோல் சென்னை, கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று அதிகாலை கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 30 முதல் 40 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும் என கூறப்பட்டுள்ளது.