தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

120 வயசு ஔவையாருக்கு உதவித் தொகை வரல.. நெல்லை மூதாட்டியின் வேதனை! - Tirunelveli

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 4, 2024, 6:33 PM IST

திருநெல்வேலி: வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஔவையார். இவர் முதியோர் உதவித்தொகை பெற்று தனது பேத்தியுடன் வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், இந்த மூதாட்டிக்குக் கடந்த மூன்று மாதக் காலமாக முதியோர் உதவித்தொகை வரவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பலரிடம் கேட்டும் தீர்வு கிடைக்காத நிலையில், ஔவையார் பாட்டி இன்று (மார்ச்.4) தனது பேத்தியுடன் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தார்.

தள்ளாத வயதிலும், கம்பு ஊன்றி தனது பேத்தியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்ததைப் பார்த்த மக்கள் மிகவும் வேதனைக்குள்ளானார்கள். அப்போது மூதாட்டி சற்றே குறையாத கிராமத்துப் பாஷையில், எனக்குக் கண்ணும் தெரியாது, காதும் கேட்காது தங்க மக்கா உதவித்தொகை வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

இது குறித்து அவரது பேத்தி கூறும்போது, "கடந்த மூன்று மாதக் காலமாக எனது பாட்டிக்கு முதியோர் உதவித்தொகை வரவில்லை எனவும் பெரு வெள்ளம் காலம் முதலே மிகுந்த சிரமத்துடன் அவரைக் காப்பாற்றி வருவதாகவும், தற்போது சாப்பாட்டுக்கு மிகவும் சிரமப்படுவதாகவும், அரசு அவருக்கு முதியோர் உதவித்தொகை வழங்க வேண்டும். அப்படி வழங்கினால் மிகுந்த உதவியாக இருக்கும்" என்றும் தெரிவித்தார்.

பாட்டி தனக்கு 120 வயது ஆவதாகத் தெரிவித்தார். ஆனால் பாட்டியிடம் இருந்த ஆவணங்களைப் பார்த்த போது 87 வயது ஆனதற்கான குறிப்பு இருந்தது. அதே சமயம் பாட்டியின் தோற்றத்தையும், அவரது செயல்பாட்டைப் பார்க்கும் போது வயது 100ஐ தாண்டி இருக்கும் எனத் தெரிகிறது.

ABOUT THE AUTHOR

...view details