தருமபுரி அவ்வையார் அரசு மகளிர் பள்ளியில் களைகட்டிய முப்பெரும் விழா! - sports day
Published : Jan 29, 2024, 4:18 PM IST
தருமபுரி: 167 ஆண்டுகள் பாரம்பரியமிக்க அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று (ஜன.29) நடைபெற்ற முப்பெரும் விழாவில், பள்ளி மாணவிகள் பங்கேற்று உற்சாக நடனமாடி மகிழ்ந்தனர்.
தருமபுரி மாவட்டம் நகரப் பகுதியில் அமைந்துள்ள அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, 167 ஆண்டுகள் பாரம்பரியமான அரசு பள்ளியாகச் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளி தகைசால் விருதைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில், இப்பள்ளியின் ஆண்டு விழா, விளையாட்டு விழா, இலக்கிய மன்ற விழா உள்ளிட்ட முப்பெரும் விழா இன்று (ஜன.29) கோலாகலமாக நடைபெற்றது. இதில் பள்ளியின் தலைமை ஆசிரியை கலைச்செல்வி வரவேற்றுப் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி வெங்கடேஸ்வரன், அவ்வையார் அரசு மகளிர் பள்ளி தத்தெடுப்பாளர் பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் கண் கவரும் நடனம், சிலம்பம் மற்றும் தற்காப்புக் கலைகள் செய்து காட்டி பள்ளி மாணவிகள் அசத்தினர். தொடர்ந்து, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்குப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.