தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

30 அடி கிணற்றுக்குள் விழுந்த குட்டியானை.. 6 மணி நேரமாக போராடி மீட்ட வனத்துறையினர்! - GUDALUR ELEPHANT RESCUE

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 29, 2024, 4:10 PM IST

நீலகிரி: நீலகிரி மாவட்டம், கூடலூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உணவு மற்றும் குடிநீர் தேடி உலா வரும் காட்டு யானைகள் சில நேரங்களில் சகதிக்குள் சிக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது. இதனால் வனத்துறையினர் வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நீலகிரி அருகே உள்ள கொளப்பள்ளி குறிஞ்சி நகர் பகுதியில் நேற்று நள்ளிரவு யானைக் கூட்டத்தில் இருந்த குட்டியானை ஒன்று தவறி கிணற்றுக்குள் விழுந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து கிணற்றுக்குள் விழுந்த குட்டி யானையை மீட்கும் முயற்சியில் இறங்கினர்.

இதற்காக இரண்டு ஜேசிபிகள் வரவழைக்கப்பட்டு, கிணற்றைச் சுற்றி மண்ணை அப்புறப்படுத்தும் பணியானது நடைபெற்றது. இதன் பின்னர் ஜேசிபி உதவியுடன்  கிணற்றில் இருந்த குட்டி யானை வெளியே வரும் அளவிற்கு பாதையை ஏற்படுத்தி, கயிறுகள் கட்டி குட்டி யானையை மீட்க முயற்சித்தனர்.

குட்டி யானை வெளியே வர நீண்ட நேரம் முயற்சித்தது, பின்பு மெதுவாக கிணற்றிலிருந்து மேலே ஏறி வனப்பகுதிக்குள் ஓடியது. சுமார் 11 மணி நேரம் கிண்ற்றுக்குள் சிக்கித் தவித்த குட்டி யானையை 6 மணி நேரம் போராடி மீட்ட வனத்துறையினரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ABOUT THE AUTHOR

...view details