தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

நடனமாடி மனு கொடுத்த நாட்டுப்புற கலைஞர்கள்! ஆட்சியர் அலுவலகத்தில் ருசிகரம்! - ராணிப்பேட்டை செய்திகள்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 5, 2024, 10:54 PM IST

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. அப்போது நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் நல அறக்கட்டளை சார்பில் 20க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

அந்த மனுவில் குறிப்பிட்டிருப்பதாவது "ராணிப்பேட்டை மாவட்டத்தில் கலை பண்பாட்டுத் துறையில் பதிவு செய்துள்ள நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் 500 பேர் வசித்து வருகின்றனர். இவர்களில் பலருக்கும் செந்தமாக வீடு, நிலம் உள்ளிட்ட ஏதும் சொந்தமாக இல்லை. எனவே தமிழ்நாடு அரசு வழங்கும் வீட்டுமனைப் பட்டவை எங்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்து நாட்டுப்புற கலைஞர்கள் கூறுகையில் "முன்பு எல்லாம் நாட்டுப்புற கலைஞர்கள் என்றால் மரியாதை இருந்தது எந்த கோயிலில் விஷேசம் என்றாலும் நாட்டுப்புற கலைஞர்கள் அழைத்து குத்து போன்றவற்றை நடத்தினார்கள். ஆனால் இப்போது அது போன்று நடத்துவது வெகுவாக குறைந்து விட்டது. இதன் காரணமாக எங்களுக்கு போதிய வருமானம் இல்லை, இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழ்நாடு அரசு வழங்கும் பட்டாவை எங்களுக்குக் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" எனக் கோரிக்கை வைத்துள்ளனர். 

ABOUT THE AUTHOR

...view details