தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

“அங்க எதுக்கு போன..?” கிணற்றுக்குள் தவறி விழுந்த நாய் குட்டி மூன்று நாட்களுக்கு பிறகு மீட்பு! - Dog rescue from well in Theni

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 25, 2024, 9:21 PM IST

தேனி: ஆண்டிபட்டி அருகே 100 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்து 3 நாட்களாக தவித்து வந்த நாய் குட்டியை  தீயணைப்புத் துறையினர் கிணற்றுக்குள் கயிறு கட்டி இறங்கி பத்திரமாக மீட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இது குறித்த வீடியோ காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள மொட்டனூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவர் வளர்த்து வந்த நாய் குட்டி மூன்று நாட்களுக்கு முன்பாக காணாமல் போயுள்ளது. பல இடங்களில் ஜெயராமன் தேடியும் நாய் குட்டி கிடைக்காத நிலையில், அருகே உள்ள 100 அடி ஆழம் கொண்ட தண்ணீர் உள்ள கிணற்றில் தவறி விழுந்துள்ளது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, ஆண்டிபட்டி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறை இணை அலுவலர் முத்துக்குமரன் தலைமையிலான தீயணைப்புத் துறையினர், 100 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் கயிறு கட்டி இறங்கி நாய் குட்டியை பத்திரமாக மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளனர்.

தற்போது, இது குறித்த வீடியோ காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும், கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிப் வந்த நாய் குட்டியை மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details