எப்பா சாப்பாடு எதுவும் இருக்கா! வீட்டு கேட்டை உடைத்து காட்டு யானை அட்டகாசம்! - Elephnat Attrocity video
Published : Aug 18, 2024, 9:34 AM IST
கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்டம் ஆலாந்துறை மற்றும் சாடிவயல் பகுதியில் கடந்த 10 நாட்களாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இவ்வாறு உலா வரும் காட்டு யானைகள் இரவு நேரங்களில் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருகிறது.
மேலும் ஒரு சில யானைகள் வீடுகளுக்குள் புகுந்து அரிசி, புண்ணாக்கு உள்ளிட்ட பொருட்களை சாப்பிடுகிறது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை வெள்ளியங்கிரி சாலை இருட்டுப்பள்ளம் பகுதியில் ஒற்றை யானை உலாவி கொண்டு இருந்தது.
பின்னர் அப்பகுதியில் உள்ள ராஜேந்திரன் என்பவது வீட்டின் கேட்டை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்த யானை, அங்கு சிறிது நேரம் உணவு தேடி விட்டு மீண்டும் வனப்பகுதியை நோக்கி சென்றது. இது தொடர்பான காட்சிகள் அங்கு பொறுத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன.
இந்த காட்சிகள் தற்போது சமூக வளைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. யானைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என அப்பகுதிகள் மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.