தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

50 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற பிள்ளை கொத்தூர் எருது விடும் விழா! - கிருஷ்ணகிரி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 5, 2024, 6:36 PM IST

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த பிள்ளை கொத்தூர் கிராமத்தில், 50 ஆண்டுகளுக்கு பிறகு பாரம்பரிய எருது விடும் திருவிழா இன்று (மார்ச் 5) நடைபெற்றது. பிள்ளை கொத்தூர் கிராம மக்கள் ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே இதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டு வந்தனர். 

மாடுகளுக்கு தனி கேலரிகளும், பொதுமக்களுக்கு காலை முதல் தொடர் அன்னதானங்களும் வழங்கப்பட்டது. இந்த விழாவில் தருமபுரி, இராயக்கோட்டை, சூளகிரி, பாகலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான காளைகள் பங்கேற்றன. அதேபோல், இவ்விழாவில் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர். 

காளைகள் கொம்புகளில் வண்ண தடுக்கைகளை கட்டிக்கொண்டு சீறிப் பாய்ந்தன. காளைகளை அடக்க காளையர்களும் போட்டி போட்டதால் எருது விடும் விழா சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது. பல ஆண்டுகள் கழித்து இந்த எருது விடும் விழா நடைபெறுவதால், பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்படும் என நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியிலும், முன்னெச்சரிக்கையாக தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயார் நிலையில் இருந்தன. 

ABOUT THE AUTHOR

...view details