தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

திருவண்ணாமலையில் எருது விடும் விழா..200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு! - எருது விடும் விழா

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 19, 2024, 8:25 AM IST

திருவண்ணாமலை: செங்கம் அடுத்த பரமனந்தல் கிராமத்தில் எருது விடும் விழா நேற்று (பிப்.18) நடைபெற்றது. இதில், சுமார் 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று சீறிப் பாய்ந்தன.

செங்கம் அடுத்த பரமனந்தல் ஊராட்சி, திருவள்ளுவர் நகர் பகுதியில் 5 வது ஆண்டு எருது விடும் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த எருது விடும் விழாவில் திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து, சுமார் 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

இரண்டு சுற்றுகளாக நடைபெறும் எருது விடும் விழாவில், 100 மீட்டர் நிர்ணயிக்கப்பட்ட தொலைவை, குறைந்த நேரத்தில் அடைந்த காளைகளின் உரிமையாளருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அந்தவகையில், முதல் பரிசாக ரூ.50 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ. 40 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.30 ஆயிரம் என போட்டியில் வெற்றி பெற்ற 51 காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த விழாவில், செங்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் மற்றும் ஊர்மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details