தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

கரும்பு லாரியை கட்டம் கட்டிய யானை.. ஓட்டுநர் தப்பியோடும் வீடியோ வைரல்! - erode elephant

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 22, 2024, 1:12 PM IST

ஈரோடு: பண்ணாரி சோதனை சாவடி அருகே பழுதாகி நின்ற லாரியில் உள்ள கரும்பை ஒற்றை காட்டு யானை பிடுங்கி சாப்பிட்டுள்ளது. யானையை துரத்துவதர்காக ஓட்டுநர்கள் சத்தம் போட்டதால், ஆத்திரமடைந்த யானை ஓட்டுநர்களை துரத்தியுள்ளது. யானையிடமிருந்து தப்பிக்க ஓட்டுநர்கள் லாரியை சுற்றி சுற்றி வந்து யானையுடன் கண்ணாமூச்சி விளையாடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தமிழகம் - கர்நாடகத்தை இணைக்கும் பண்ணாரி தேசிய நெடுஞ்சாலையில், சாம்ராஜ் நகரில் இருந்து கரும்பு ஏற்றி வந்த லாரி சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளது. அப்பொழுது, பண்ணாரி சோதனைச்சாவடி அருகே சென்றபோது லாரி பழுதாகி நின்றுள்ளது.

அப்போது வனத்தில் இருந்து வெளியே வந்த ஒற்றை யானை, பழுதாகி நின்ற லாரியில் உள்ள கரும்பை பிடுங்கி சுவைத்து சாப்பிட்டது. இதனால், சாலையில் சென்ற வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. யானை கரும்பை பிடுங்கி சாப்பிட்டதால், லாரிக்குள் இருந்த ஓட்டுநர்கள் யானையை பார்த்து சத்தமிட்டுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த யானை ஓட்டுநர்களை துரத்தியது.

யானையிடமிருந்து தப்பிக்க ஓட்டுநர்கள் லாரியை சுற்றி சுற்றி வந்தனர். சிறிது நேரத்துக்குப் பிறகு யானை, தேவையான கரும்புகளை எடுத்துக் கொண்டு காட்டுப் பகுதிக்குள் சென்றது. இதனையடுத்து, அப்பகுதியில் பாதிக்கப்பட்ட போக்குவரத்து சரிசெய்யப்பட்டது.

யானையிடம் இருந்து பிழைத்துக் கொள்வதற்காக லாரி ஓட்டுநர்கள் யானையுடன் கண்ணாமூச்சி விளையாடிய வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details