Live: காரைக்குடியில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து ஈபிஎஸ் பிரச்சாரம்! - lok sabha elections 2024 - LOK SABHA ELECTIONS 2024
Published : Apr 8, 2024, 5:48 PM IST
|Updated : Apr 8, 2024, 8:54 PM IST
காரைக்குடி: தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழ்நாடு முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக, எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகள் இணைந்து போட்டியிடுகிறது. அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இன்று மாலை சிவகங்கை தொகுதி அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸை ஆதரித்து காரைக்குடியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.பின்னர் இரவு 7 மணி அளவில் ராமநாதபுரத்தில் நடைபெறும் தேர்தல் பொதுக்கூட்டத்தில் ராமநாதபுரம் அதிமுக வேட்பாளர் பா.ஜெயபெருமாளை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார். தேர்தல் பிரச்சாரங்களில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளையும், பாஜக கூட்டணியில் உள்ள பாமக கட்சியினரையும் ஈபிஎஸ் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். மேலும் தேர்தல் பிரச்சாரத்தில் இம்முறை திமுக, அதிமுகவுக்கு மட்டுமே தமிழ்நாட்டில் போட்டி நிலவுகிறது என ஈபிஎஸ் கூறி வருகிறார்.
Last Updated : Apr 8, 2024, 8:54 PM IST