தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

நொய்யல் ஆற்றில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்...கண்கவரும் ட்ரோன் காட்சிகள்! - NOYYAL RIVER - NOYYAL RIVER

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 30, 2024, 7:12 PM IST

கோயம்புத்தூர்: தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள சிறுவாணி அணையின் நீர் பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால் சிறு சிறு ஓடைகளில் நீர் வரத்து அதிகரித்து பல்வேறு இடங்களில் புதிய நீர்வீழ்ச்சிகள் உருவாகி நொய்யல் ஆற்றில் கலப்பதால் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் நொய்யல் ஆற்றின் முதல் தடுப்படையான சித்திரை சாவடி தடுப்பணையில் வினாடிக்கு 1200 கன அடி தண்ணீர் வெளியேறியது. நொய்யல் ஆற்றில் இருந்து பல்வேறு குளங்களுக்கு செல்லக்கூடிய ராஜ வாய்க்காலுக்கு 100 அடி 100 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. 

கோவை குற்றால அருவி மற்றும் நொய்யல் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் அதனை ஏராளமான கண்டு ரசித்து வருகின்றனர். அதே சமயம் பொதுமக்கள் யாரும் நொய்யல் ஆற்றில் குளிக்கவும் இறங்கவும் கூடாது என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் கோடை காலத்தில் நொய்யல் ஆற்றில் நீர் வரத்து இன்றி வறண்டு காணப்பட்ட நிலையில் தற்போது நொய்யல் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வறண்டு காணப்பட்ட நொய்யல் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details