தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

சென்னையில் கோலாகலமாக தொடங்கிய திமுக முப்பெரும் விழா மற்றும் பவள விழா! - நேரலை காட்சிகள் - DMK Mupperum Vizha 2024 - DMK MUPPERUM VIZHA 2024

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 17, 2024, 4:58 PM IST

Updated : Sep 17, 2024, 8:12 PM IST

சென்னை : திமுக சார்பில் ஆண்டுதோறும் செப் 15ம் தேதி அண்ணா பிறந்த நாள், செப்டம்பர் 17ம் தேதி பெரியார் பிறந்த நாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டு திமுக தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவடைந்ததால், முப்பெரும் விழாவோடு சேர்த்து பவள விழாவும் இன்று (செப் 17) சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் கொண்டாடப்படுகிறது. அதனை நேரலையில் காணலாம். திமுகவின் முப்பெரும் விழாவில் கட்சியில் சிறப்பாக பணியாற்றுபவர்களை அடையாளம் காட்டும் விதமாக, கடந்த 1985ஆம் ஆண்டு முதல் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. கட்சியினர் மத்தியில் விருது பெறுபவர்கள் மிக கௌரவமாக பார்க்கப்படுகின்றனர். அதன்படி, இந்த ஆண்டிற்கான விருது பெறுபவர்களும் அறிவிக்கப்பட்டனர்.பெரியார் விருது - பாப்பம்மாள், அண்ணா விருது - அறந்தாங்கி நிஷா ராமநாதன், கலைஞர் விருது - எஸ்.ஜெகத்ரட்சகன், பாவேந்தர் விருது - கவிஞர் தமிழ்தாசன், பேராசிரியர் விருது - வி.பி.ராஜன் ஆகியோருக்கு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல் புதியதாக விருது பட்டியலில் சேர்க்கப்பட்ட 'மு.க.ஸ்டாலின் விருதை' தஞ்சை எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்துக்கு வழங்கப்படுகிறது. இவ்விழாவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI) மூலம் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நேரில் வந்து தமிழ்நாடு முதலமைச்சரை வாழ்த்தி உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விழாவுக்கு திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் தலைமை தாங்குகிறார். திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு ஆகியோர் வாழ்த்தி பேசுகின்றனர். அமைச்சர் மா.சுப்பிரமணியன் வரவேற்று பேசுகிறார். 
Last Updated : Sep 17, 2024, 8:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details