தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

"தமிழகத்தில் பாஜகவை அழிக்கும் வரை நாங்கள் ஓய மாட்டோம்" - திண்டுக்கல் சீனிவாசன் அதிரடி! - edappadi palaniswami

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 2, 2024, 9:25 AM IST

திண்டுக்கல்: பட்டியல் சமூக பணிப்பெண் மீது வன்கொடுமைகளை ஏவி, கொடூர தாக்குதல் நடத்தியவர்களின் மீது உரிய நடவடிக்கைவில்லை என்று கூறி திமுக அரசைக் கண்டித்து திண்டுக்கல்லில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார். 

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், "தமிழகத்தில் பாஜகவை அழிக்கும் வரை நாங்கள் ஓய மாட்டோம். ஓபிஎஸ் மற்றும் பாஜக ஆதரவு காரணமாகத் தான் நான்கரை ஆண்டுகள் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி செய்தார் என்ற செய்தியாளர் கேள்விக்கு, "எடப்பாடி பழனிசாமி ஆதரவு இருந்ததால் தான் அதிமுக வேஷ்டி கட்டி, அதிமுக கொடியைப் பயன்படுத்தி ஆண்மகனாக ஓபிஎஸ் வெளியே வந்தார். தெய்வத்தின் தண்டனையாக தற்போது அதிமுக வேஷ்டியைக் கூட அவரால் கட்ட முடியவில்லை. இது தெய்வத்தின் தீர்ப்பு. 

ஓபிஎஸ் பேசுவதெல்லாம் ஒரு பொருட்டு கிடையாது. தமிழகத்தில் எங்களுக்கு போதுமான எம்எல்ஏக்கள் இருந்ததால் தான் நான்கரை ஆண்டுகள் நாங்கள் ஆட்சி செய்தோம். ஓபிஎஸ்ஸோ, மற்றவர்களோ (பாஜக ) எங்களுக்கு ஒன்றும் செய்யவில்லை.தமிழகத்தைப் பொறுத்தவரை நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி உரிய நேரத்தில் அறிவிப்பார். 

தமிழகத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும். அதன் பின், மத்தியில் தமிழகத்திற்கு யார் நல்லது செய்கிறார்களோ அந்த கட்சியின் பிரதமர் வேட்பாளருக்குத் தான் எங்களது ஆதரவு" என்றார்.

மத்தியில் மீண்டும் பாஜக: மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் அவர்களுக்கு உங்களுடைய ஆதரவு உண்டா என்ற கேள்விக்கு, "பாஜக மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் எங்களுடைய ஆதரவு கிடையாது" என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details