LIVE: கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீடு! - kalaignar commemorative coin launch - KALAIGNAR COMMEMORATIVE COIN LAUNCH
Published : Aug 18, 2024, 6:47 PM IST
|Updated : Aug 18, 2024, 7:59 PM IST
சென்னை: தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சென்னை, கலைவாணர் அரங்கில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு 100 ரூபாய் நினைவு நாயணத்தை வெளியிடுகிறார். அதன் நேரலை காட்சிகள்...கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா 'கருணாநிதி நினைவு நாணயம்' வெளியிட மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். நாணய வெளியீடு அனுமதி கடிதத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கையெழுத்திட்ட நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி நாணயத்தை அச்சடித்துள்ளது.இன்று நடைபெற்று வரும் நிகழ்ச்சியில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 100 ரூபாய் நினைவு நாயணத்தை வெளியிட, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாணயத்தைப் பெறுகிறார். இந்த நாணயத்தில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் 'டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி' என்ற பெயருடன், 'தமிழ் வெல்லும்' என்ற தமிழ் வாசகம் கருணாநிதி நினைவு நாணயத்தில் இடம்பெற்றுள்ளது.இந்த விழாவில், அமைச்சர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கூட்டணி கட்சியினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
Last Updated : Aug 18, 2024, 7:59 PM IST