மரத்தில் ஏறி, இறங்கும் சிறுத்தை குட்டி! வைரலாகும் கியூட் வீடியோ - LEOPARD CUBS ENTER COONOOR
Published : Nov 26, 2024, 12:01 PM IST
நீலகிரி: தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களில் நீலகிரி மாவட்டத்திற்கென எப்போதும் தனி இடம் உள்ளது. மலை, காடுகள் என இயற்க்கை கொஞ்சும் மாவட்டமாக நீலகிரி உள்ளது. வனப்பகுதி அதிகமாக உள்ல காரணத்தால் அவ்வபோது வனவிலங்குகள் மக்கள் இருக்கும் இடத்திற்கு வந்து உலவுவது வழக்கமாக உள்ளது.
சமீப காலமாக தேயிலைத் தோட்டங்களில் யானை, காட்டெருமை, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் அதிகளவில் உலா வருகின்றன. இதனால் தேயிலை தோட்டங்களில் வேலை செய்வது சில சமயங்களில் அச்சத்தை ஏற்படுத்துவதாக தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வனத்துறைக்கு தொடர்ந்து புகார் அளித்து வருவதாக கூறிகின்றனர்.
இந்நிலையில், நேற்று குன்னூர் அருகே உள்ள கோடமலை என்ற கிராமத்தின் தேயிலைத் தோட்டத்தில் உள்ள உயரமான மரத்தில் சிறுத்தைக் குட்டி ஒன்று ஏறி, இறங்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இது குறித்து கோடமலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் அச்சம் தெரிவித்து வருகின்ற நிலையில் இணைவாசிகள் இந்த வீடியோ காட்சியை அழகிய காட்சியாக கண்டு மகிழ்ந்து, அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.