தமிழ்நாடு

tamil nadu

"நாங்களும் கோயம்புத்தூர் தான்" - கோவை - அபுதாபி விமான கேப்டன் வைரல் வீடியோ! - indigo flight captain speech

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 10, 2024, 10:46 PM IST

கேப்டன் விவேக் கந்தசாமி, இண்டிகோ விமானம் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

கோயம்புத்தூர்: கோவை - அபுதாபி இடையே இன்று முதல் விமான போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில், முதல் விமானம் புறப்படும் முன்பாக விமானத்தின் கேப்டன் கோவையை சேர்ந்த விவேக் கந்தசாமி பயணிகளிடையே பேசிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நீண்ட நாள் கோரிக்கையான கோவை - அபிதாபி இடையேயான விமான சேவை இன்று (ஆக.10) முதல் துவங்கப்பட்டது. இன்று காலை சுமார் 163 பயணிகளுடன் இண்டிகோ விமானம் அபுதாபியில் இருந்து கோவைக்கு விமான நிலையத்திற்கு வந்தது.

இந்நிலையில், கோயம்புத்தூரில் இருந்து அபுதாபி செல்ல தயாராக இருந்த முதல் இண்டிகோ வினானத்தின் கேப்டன் பயணிகளிடையே பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. அதில், "முதல் விமானம் கோயம்புத்தூரில் இருந்து அபுதாபிக்கு செல்கிறது. அக்டோபர் 28 முதல் சிங்கப்பூர் செல்வதற்கும் விமான சேவை தொடங்கப்படும். கோயம்புத்தூரில் இருந்து அபுதாபிக்கு செல்லும் முதல் விமானத்தை விமானத்தை இயக்குவது பெருமையாக உள்ளது. நான் உங்கள் கேம்டன் விவேக் கந்தசாமி. என்னுடன் வரும் மற்றோரு கேப்டன் வினோத் குமார் சந்திரன். நாங்கள் இரண்டு பேரும் கோயம்புத்தூர் தான். நாங்கள் முதல் விமானத்தை இயக்குவதில் பெருமை" இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details