கோவையின் பெருமையைப் பாட்டாகப் பாடிய பள்ளி மாணவி.. இணையத்தில் குவியும் பாராட்டுக்கள்! - பள்ளி மாணவி பாடல்
Published : Feb 18, 2024, 9:44 PM IST
கோயம்புத்தூர்: கோவை பேரூர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணகுமார் மஹாலக்ஷ்மி தம்பதியினர். இவர்களது 13 வயது மகள் ஜனிக்கா ஸ்ரீ. தனியார்ப் பள்ளியில் 8ம் வகுப்பு பயின்று வரும் ஜனிக்கா ஸ்ரீ சிறு வயதில் இருந்தே நாட்டுப்புறப் பாடல்களில் ஆர்வம் காட்டி வந்துள்ளார்.
அதனால் இளம் வயதில் இருந்தே சிறு சிறு நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி வருகிறார். இந்நிலையில் தற்போது கோவையின் பெருமையைப் பாட்டாகப் பாடி அசத்தி உள்ளார். கோவையின் இயற்கை வளங்கள், கொங்கு தமிழ், கோவை சுற்றுச் சூழல் எனக் கோவை மண்ணின் பெருமை ஆகியவற்றைப் பாடலாகப் பாடி வெளியிட்டுள்ளார்.
வந்தாரை வாழ வைக்கும் கோயம்புத்தூர் எனத் தொடங்கி, கோவையின் சிறுவாணி தண்ணீர், மரம் சூழ்ந்த சாலைகள் என அவ்வூரின் பெருமைகளை அடுக்கி பாடாக அமைத்துப் பாடியுள்ளார் ஜனிக்கா ஸ்ரீ. தற்போது இந்த பாடல் இணையத்தில் வெளியாகி அதிகமானோரால் பகிரப்பட்டு வருகிறது. மேலும் அவரது இந்த பாடலை கோவை மக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.