ஸ்ரீ கௌரம்மாள் சமேத சித்தேஸ்வரர் கோயில்.. சித்திரை வளர்பிறை பிரதோஷம் கோலாகலம்! - Sri Gaurammal Sametha Chitheswarar - SRI GAURAMMAL SAMETHA CHITHESWARAR
Published : May 5, 2024, 10:51 PM IST
ராணிப்பேட்டை: வாலாஜாபேட்டை ஸ்ரீ கௌரம்மாள் சமேத சித்தேஸ்வரர் திருக்கோயிலில் சித்திரை மாத வளர்பிறை பிரதோஷ நாளான இன்று, பக்தர்கள் பிரதோஷ நாதரை சுமந்து, தாலாட்டு பாடி சிறப்பு வழிபாடு செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை சோளிங்கர் செல்லும் சாலையில், அருள்மிகு ஸ்ரீ கௌரம்மாள் சமேத சித்தேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சித்திரை மாத வளர்பிறை பிரதோஷ விழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், ஸ்ரீ கௌரம்மாள் சமேத சித்தேஸ்வரர் திருக்கோயிலின் சித்திரை மாத வளர்பிறை பிரதோஷ விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக கோயிலில் நந்திகேஸ்வரருக்கு பால், தயிர், மஞ்சள், தேன், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வாசனைத் திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்வேறு வகையான பூ மாலைகள் மற்றும் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பிரதோஷ நாதரை, பக்தர்கள் தோளில் சுமந்தபடி ஹர..ஹர..சங்கர சிவ..சிவ..சங்கர என பக்தி கோஷங்களை எழுப்பி, தாலாட்டு ஆடியபடி சிவபுராணம் பாடல்களை பாடி கோயிலை வலம் வந்தனர்.