கரும்பு ஜூஸ் இயந்திரத்தில் சிக்கிய சிறுமியின் கை.. நொடிப்பொழுதில் உயிர் தப்பிய சிறுமி! - பதைபதைக்க வைக்கும் வீடியோ - girl stuck in sugarcane machine - GIRL STUCK IN SUGARCANE MACHINE
Published : May 29, 2024, 1:52 PM IST
சேலம்: சேலம் மாவட்டம், செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையம் அருகே மாது என்பவர் நடத்தி வரும் கரும்பு ஜூஸ் கடையில், அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் தனது ஒன்பது வயது மகளுடன் கரும்பு ஜூஸ் குடிக்க சென்றுள்ளார். அப்போது சிறுமி கரும்புச்சாறு பிழியும் இயந்திரத்தின் அருகில் நின்று ஜூஸ் குடித்துவிட்டு புறப்பட்ட போது, சிறுமியின் சட்டை எதிர்பாராத விதமாக கரும்பு பிழியும் இயந்திரத்தில் சிக்கியது.
அடுத்த நொடிப்பொழுதில் சிறுமியின் முழங்கை இயந்திரத்தின் பற்சக்கரங்களில் மோதி படுகாயம் அடைந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தந்தை, அங்கிருந்தவர்களின் உதவியோடு, சிறுமியை பத்திரமாக மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்.
அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டப்பின், மேல் சிகிச்சைக்காக அச்சிறுமி சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். சிறு கவனக்குறைவால் நொடிப்பொழுதில், சிறுமிக்கு நேர்ந்த அசம்பாவிதம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிறுமி கரும்பு பிழியும் இயந்திரத்தில் மோதி, காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவாகி உள்ளது. அந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.