தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

காஸ்ட்லி பைக்கில் வந்து ஜவுளிக் கடையில் டி ஷர்ட் திருட்டு.. பலே இளைஞர்கள் கைவரிசை காட்டிய வீடியோ! - CCTV Footage Of T Shirt Theft - CCTV FOOTAGE OF T SHIRT THEFT

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 21, 2024, 5:32 PM IST

சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டை சிங்காரத்தோட்டம் பகுதியில் பல்வேறு துணிக்கடைகள் செயல்பட்டு வருகிறது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மக்கள் இந்த பகுதியில் துணிகள் வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இந்த நிலையில், வண்ணாரப்பேட்டை சிங்காரத்தோட்டம் பகுதியில் கங்காதரன் என்பவர் துணிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் கடந்த 15 வருடமாக துணிக்கடை வைத்து நடத்தி வரும் நிலையில், இவரது கடையின் வெளியே விளம்பரத்திற்காக டி ஷர்ட்களை கேங்கர்களில் மாட்டி தொங்க வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இத்தகைய சூழலில், நேற்று முன்தினம் (செப்.19) விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரு இளைஞர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில், கங்காதரன் தனது கடையின் வெளியே தொங்கவிட்டு வைத்திருந்த டி ஷர்ட் ஒன்றை எடுத்துக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் தப்பி ஓடியுள்ளனர்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கங்காதரன் ராயபுரம் குற்றப்பிரிவு ஆய்வாளரிடம் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த போலீசார், திருட்டு சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து தப்பி ஓடிய இளைஞர்களை தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details