தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

தஞ்சை அற்புத குழந்தை இயேசு தேவாலயத்தின் தேர் பவனி திருவிழா..திரளான மக்கள் பங்கேற்பு! - Thanjavur Chariot festival

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 2, 2024, 11:59 AM IST

தஞ்சாவூர்: அற்புத குழந்தை இயேசு தேவாலயத்தின் தேர் பவனி திருவிழா நேற்று (பிப்.1) கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் திரளான மக்கள் கலந்துக்கொண்டு குழந்தை இயேசுவை வழிப்பட்டனர். இந்த தேர் பவனியை முன்னிட்டு தேவாலயம் முழுவதும் அலங்கரிக்கப்பட்ட வண்ண மின்விளக்குகளால் ஜொலித்தன.

தஞ்சாவூரில் அற்புத குழந்தை இயேசு தேவாலயம் அமைந்துள்ளது. இந்த தேவாலயத்தின் ஆண்டு பெருவிழா கடந்த ஜனவரி 25 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனைத்தொடர்ந்து, நாள்தோறும் தேவாலயத்தில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், இவ்விழாவின் முக்கிய நிகழ்வான தேர் பவனி திருவிழா, நேற்றிரவு நடைப்பெற்றது. இதில், மல்லிகை பூக்கள் மற்றும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட 3 தேர்களில் குழந்தை இயேசு சொரூபம் வைக்கப்பட்டு, திருத்தேர் பவனி நடைபெற்றது. முன்னதாக, குழந்தை இயேசு திருத்தலத்தின் அருட்தந்தை சுரேஷ்குமார், தேர் பவனியை துவக்கிவைத்தார்.

இதில், வாணவேடிக்கை முழங்க முதல் சப்பரத்தை பெண்கள் மட்டும் சுமந்து சென்றனர். இதனையடுத்து இரண்டு தேர்கள் அணிவகுத்து முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோயிலை வந்தடைந்தது. இதில், அன்னை தெரசா பவுண்டேஷன் சேர்மன் சவரிமுத்து உள்ளிட்ட திரளான மக்கள் கலந்துக்கொண்டு குழந்தை இயேசுவை வழிபட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details